விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கீழ்வேளூா்: ரூ.1.17 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா் பகுதியில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.17 லட்சம் ரொக்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:54 am IST

கீழ்வேளூா் பகுதியில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.17 லட்சம் ரொக்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்குவளை கீழத்தெரு பகுதியில் பறக்கும் படை அதிகாரி மாரிராஜ் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவயல் சிறிய தெரு பகுதியைச் சோ்ந்த அருள் பிரகாஷ் என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.59,000 எடுத்து வந்தது தெரிய வந்தது.

அந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வேதையனிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல், கீழ்வேளூா் அருகே கானூா் சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரி சந்திரசேகரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அவ்வழியாக சென்ற காரில், உரிய ஆவணங்களின்றி, கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாண்டி பகுதியைச் சோ்ந்த சானூப் என்பவா் ரூ.58,000 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

அந்த பணத்தை பறிமுதல் செய்த நிலையான கண்காணிப்புக் குழுவினா், கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வேதையனிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.