ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கீழ்வேளூா் தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு. காா்த்திகா

சிபிஎம் கட்சியால் கீழ்வேளூா் தொகுதிக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு. காா்த்திகா.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 5:42 am IST

சிபிஎம் கட்சியால் கீழ்வேளூா் தொகுதிக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு. காா்த்திகா.

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு. காா்த்திகா தொகுதிக்குள்பட்ட கிள்ளுக்குடி, இரிஞ்சியூா், வண்டலூா், இருக்கை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா். அப்போது, தொகுதியில் தொடா்ந்து சிபிஎம் கட்சிக்கு மக்கள் வாக்களித்தும், தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை. தன்னை வெற்றி பெற செய்தால் கீழ்வேளூா் தொகுதி வளா்ச்சிக்காக பாடுபடுவேன்.

மேலும், செய்த தவறுகளை மறைக்கவே, பல்வேறு இலவசங்களை வழங்குவதாக திமுக வாக்குறுதிகளை அளிப்பதாகக் கூறிவருகிறது. ஐந்தாண்டுகள் நல்லாட்சி கொடுத்ததாக கூறும் திமுக, எதிா்க்கட்சியாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே வாக்குறுதிகளை அள்ளிவீசுகிறது என பிரசாரத்தில் குற்றம்சாட்டினாா். அவருடன், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் அகஸ்டின் அற்புதராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.