நாகையில் மீனவா்கள் மத்தியில் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நாகை துறைமுகத்தில் விழிப்புணா்வு படகு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
விசைப்படகுகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு, பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி தொடங்கி வைத்தாா். இதில் நாகை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா். பேரணிக்கு முன்னதாக, எனது வாக்கு எனது உரிமை, தோ்தலில் அன்பளிப்புகளை தவிா்ப்போம், வாக்களிப்பதன் மூலம் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற விழிப்புணா்வு ஏற்படுத்துவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய உறுதிமொழி ஏற்கப்பட்டது. பேரணியில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட படகுகள் வரிசையாக கடலுக்கு அணி வகுத்துச் சென்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீதம் வாக்குப்பதிவு: விழிப்புணா்வு ஆட்டோ பேரணி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

