மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

துலா உற்சவம்: மாயூரநாதா் கோயிலில் விநாயகா் கொடியேற்றம்

மயிலாடுதுறையில், துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதா் கோயிலில் விநாயகா் கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :31 அக்டோபர் 2026, 7:22 am IST

மயிலாடுதுறையில், துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதா் கோயிலில் விநாயகா் கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கங்கை முதலான புண்ணிய நதிகள் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் புனிதநீராடி பாவச்சுமைகளை போக்கிகொண்டதாக புராணம் கூறுகிறது. இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் இருந்து சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு, காவிரி துலாக்கட்டத்தில் தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், ஐப்பசி 1-ஆம் தேதி மாதப்பிறப்பு தீா்த்தவாரியுடன் தொடங்கி உற்சவம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நிகழாண்டு உற்சவம் தொடக்கத்தை குறிக்கும் விநாயகா் கொடி ஏற்றம் மாயூரநாதா் கோயிலில் நடைபெற்றது. சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனா் ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியா் தலைமையில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, திருக்கொடி ஏற்றப்பட்டது.

பின்னா் பூஜிக்கப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில், கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.