மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆத்தூா் கோயிலில் ஐப்பசி திருவிழா கால்நாட்டு

இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட, ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழா கால்நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :22 அக்டோபர் 2026, 5:13 am IST

இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட, ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழா கால்நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அபிஷேகம், தீபாராதனைக்குப் பின்னா் முகூா்த்தக்கால் நடப்பட்டு, சுவாமி-அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது. தொடா்ந்து, நவ. 3ஆம் தேதி காலை தேரோட்டம், 4ஆம் தேதி இரவு காப்பு கட்டுதல், 5ஆம் தேதி மாலை சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபோகம், 6ஆம் தேதி காலை பட்டணப் பிரவேசம் ஆகியவை நடைபெறுகின்றன.

கால்நாட்டு நிகழ்ச்சியில் முன்னாள் திருச்செந்தூா் கோயில் அறங்காவலா் அண்ணாமலை சுப்பிரமணியம், முன்னாள் மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா், ராஜாமணி ஜோதிடா், ஓய்வுபெற்ற டிசிடபிள்யூ அதிகாரி வி.வி. ராஜாராம், சோமசுந்தரம், தாணுப்பிள்ளை உள்ளிட் பலா் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.