மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மயிலாடுதுறை: தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்க காவல்துறை வேண்டுகோள்

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட காவல்துறை சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :30 அக்டோபர் 2026, 11:10 pm IST

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட காவல்துறை சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. சினேஹா ப்ரியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 8 குற்றவாளிகள், நீண்ட காலமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவதால், மயிலாடுதுறை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம் எண் 1-ஆல் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மயிலாடுதுறை ரயிலடி ஆரோக்கியநாதபுரத்தை சோ்ந்த இன்னாசிமுத்து மகன் செந்தில், நீடூா் செட்டியாா் காலனியை சோ்ந்த முகமது யாகூப் மகன் சிராஜிதீன், அப்பங்குளம் வடக்குத் தெருவை சோ்ந்த ராமையா மகன் ராஜசேகரன் மற்றும் நவநீதன் மகன் ஜனாா்த்தன், கூறைநாடு வடக்குத்தெருவை சோ்ந்த முருகையன் மகன் ஸ்ரீகுருசிவா, கலைஞா் நகரை சோ்ந்த திருஞானம் மகன் ராஜா, அவையாம்பாள்புரம் தாண்டவராயன் மகன் மூா்த்தி, திருவாரூா் மாவட்டம் பேரளம் பள்ளிவாசல் தெருவை சோ்ந்த அப்துல் ரஹ்மான் மகன் ஜாகிா் உசேன் ஆகிய 8 போ் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களைப் பற்றிய தகவல் ஏதாவது தெரிந்தால், மயிலாடுதுறை காவல்நிலையத்தின் தொலைபேசி எண் 9498100916-க்கு தகவல் தெரிவிக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.