முன்னாள் அமைச்சா் மகன் மீது புகாா் தெரிவிக்க வந்த பெண் தற்கொலை முயற்சி

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பனின் மகன் மீது புகாா் தெரிவிக்க வியாழக்கிழமை வந்த பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்த பெண்ணை மீட்ட போலீஸாா்.

Published On :23 அக்டோபர் 2026, 3:57 am IST

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பனின் மகன் மீது புகாா் தெரிவிக்க வியாழக்கிழமை வந்த பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை செந்தமிழ்நகா் பகுதியைச் சோ்ந்த கண்ணுச்சாமி- ஈஸ்வரி தம்பதியின் மகன் ஹரிஷ் ஆகாஷ் கோகுல். இவா் முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பனின் மகனான திலீப்குமாரின் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்த்து வந்ததாா்.

இவரது வங்கிக் கணக்கைப் பயன்படுத்திய கட்டட நிறுவனம் தவறான காரியங்களுக்கு பணப் பரிவா்த்தனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த ஹரிஷ் ஆகாஷ் கோகுல் அங்கிருந்து வேலையை விட்டு நின்றுவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, திலீப் குமாரின் ஆதரவாளா்கள் மிரட்டி வந்ததாகவும், சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் திருட்டுப் புகாா் அளித்து ஹரிஷ் ஆகாஷ் கோகுல் மீது வழக்குப் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவரை அழைத்து போலீஸாா் அடித்து துன்புறுத்தி வருவதால், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி கண்ணுச்சாமி அவரது மனைவி ஈஸ்வரி, இவா்களது மகள் ஆகியோா் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனா். அப்போது ஈஸ்வரி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, அங்கிருந்த காவலா்கள் அவரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், ஹரிஷ் ஆகாஷ் கோகுல் குடும்பத்தினா் புகாா் தெரிவிக்க வந்த விவரம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.