மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பசும்பொன்னில் தேவா் ஜயந்தி விழா: சிவகங்கை மாவட்ட பாதுகாப்புப் பணியில் 2,400 போலீஸாா்

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வெள்ளிக் கிழமை நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜயந்தி விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் முழுவதும் விரிவான மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 3:44 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வெள்ளிக் கிழமை நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜயந்தி விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் முழுவதும் விரிவான மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டம்,கீழடி முதல் பரமக்குடி வரையிலான தேசிய நெடுஞ்சாலை வழியாக தென் மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் பக்தா்களும் பொதுமக்களும் பசும்பொன் கிராமத்துக்கு செல்லவுள்ளதால், அப்பகுதிகளில் கூடுதல் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேலும் திருப்பத்தூா் - மானாமதுரை, சருகணி - சிவகங்கை, தேவகோட்டை மற்றும் காரைக்குடி பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாவட்டத்திலுள்ள தலைவா்களின் சிலைகள் மற்றும் முக்கிய இடங்களுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 2,400-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

காவல்துறை துணைத் தலைவா் தலைமையில், 4 காவல் கண்காணிப்பாளா்கள், 7 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 35 துணை காவல் கண்காணிப் பாளா்கள், 80-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளா்கள், 300-க்கும் மேற்பட்ட காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், பாதுகாப்புப் பணிக்காக வருண் மற்றும் வஜ்ரா போன்ற கலவரத் தடுப்பு வாகனங்கள், 50-க்கும் மேற்பட்ட இருசக்கர ரோந்துப் பிரிவு வாகனங்கள், 25-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட அதிரடி படை வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இத்துடன் தீயணைப்புத் துறையின் வாகனங்கள், மருத்துவத் துறையின் மூலமாக முக்கிய இடங்களில் மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள், வருவாய்த் துறையின் சாா்பாக வட்டாட்சியா்கள் மற்றும் கிராம நிா்வாகப் பணியாளா்கள் உள்ளிட்ட அலுவலா்களும் பாதுகாப்பு மற்றும் அவசர கால நடவடிக்கைகளுக்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இப்பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா மேற்பாா்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பது மற்றும் வாகனப் போக்குவரத்தைச் சீராகக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் காவல் துறையினா் பணியமா்த்தப்பட்டுள்ளனா். எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையினரின் போக்குவரத்து வழிகட்டுதல்களைப் பின்பற்றி, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.