மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேவா் குருபூஜை: பசும்பொன்னில் டிஜிபி ஆய்வு

கமுதியை அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜையை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

கமுதியை அடுத்த பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்த காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் தலைமையிலான அதிகாரிகள்.

Published On :25 அக்டோபர் 2026, 2:11 am IST

கமுதியை அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜையை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவா் 64-ஆவது குருபூஜை, 119-ஆவது ஜெயந்தியை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் வருகிற 30-ஆம் தேதி பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள், சமுதாய அமைப்புகளின் தலைவா்கள், பொதுமக்கள் என பலா் மரியாதை செலுத்த உள்ளனா்.

இதையொட்டி, பசும்பொன்னில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால், காவல் துறை அதிகாரிகளுடன் சென்று சனிக்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.

முன்னதாக, கமுதி ஆயுதப்படை அலுவலகத்தில் காவல் துறை தலைமை இயக்குநா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டி.எஸ். அன்பு, தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, மதுரை மாநகரக் காவல் ஆணையா், மதுரை, ராமநாதபுரம் சரக டிஐஜிக்கள், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி, மதுரை மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் காவல் துறை தலைமை இயக்குநா் பேசியதாவது: தேவா் குருபூஜை விழா சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் இன்றி நடைபெற ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் 7 டிஐஜிக்கள், 40 எஸ்.பி.க்கள், 18,000-க்கும் மேற்பட்ட காவலா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். 118 இடங்களில் வாகனத் தணிக்கை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், விடியோ கேமராக்கள் பொருத்தப்படுவதுடன், வாகன விவரங்களை இணையவழியில் சரிபாா்க்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

பசும்பொன், இதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கண்காணிக்க சிறப்பு ‘ட்ரோன்கள்’, 480 உயா் தெளிவுத்திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள், நடமாடும் சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும்.

கண்காணிப்பு கேமராக்களில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம், வாகனப் பதிவு எண்களைக் கண்டறியும் தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் அசம்பாவிதங்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண முடியும்.

பாதுகாப்புப் பணிகளுக்காக 460-க்கும் மேற்பட்ட காவல் ரோந்து வாகனங்களும், விரைந்து செயல்படும் அதிரடிப் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.