நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சீர்காழி அருகே மாணவர்களை கதண்டு வண்டுகள் கடித்தன!

சீர்காழி அருகே மாணவர்களை கதண்டு வண்டுகள் கடித்தது பற்றி...

sirkazhi

சீர்காழி அருகே கதண்டு வண்டுகள் கடித்த மாணவர்கள், பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதி - Dinamani

Published On :27 அக்டோபர் 2026, 12:36 pm IST

சீர்காழி அருகே பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் உள்பட 7 பேரை கதண்டு வண்டுகள் கடித்த நிலையில், அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​சீர்காழி தாலுகா வள்ளுவக்குடி, ஆதமங்கலம், அரூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் இன்று வழக்கம்போல் சீர்காழி கோயில்பத்து பகுதியில் உள்ள பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அதேபோல் பொதுமக்களும் இருசக்கர வாகனங்களில் சீர்காழிக்கு சென்று கொண்டிருந்தனர்.

​அப்போது, ஊமமதகு என்ற பகுதியில் உள்ள புளியமரத்தில் அமைந்திருந்த கதண்டு வண்டுகளின் கூடு எதிர்பாராதவிதமாக கலைந்து, அவ்வழியாகச் சென்ற மாணவர்கள் பொதுமக்களை கடித்தன.

​கதண்டு வண்டுகள் கடித்ததில் கடும் வலியால் துடித்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஆதமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆதேஷ் (13 ) வள்ளுவக்குடி பகுதியைச் சேர்ந்த தரனேஷ் (12) மற்றும் பத்தாம் வகுப்பு மாணவன் ஸ்ரீஹரி (15), பாலகுமார் (44), கலையரசன் (48) உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

Summary

Near Sirkazhi, students were stung by hornets!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.