மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேலூர் சிறுவன் உயிரிழப்பு! கொலை வழக்காக மாற்றம்; 10 வயது நண்பன், தாய் கைது!

மேலூர் சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பன், அவரது தாய் கைது செய்யப்பட்டது பற்றி...

Muthuvelan

சிறுவன் முத்துவேலன் - Dinamani

Published On :27 அக்டோபர் 2026, 11:48 am IST

மதுரை மாவட்டம், மேலூா் அருகே விளையாடச் சென்ற 7 வயது சிறுவன் முத்துவேலன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கை கொலை வழக்காக காவல்துறையினர் மாற்றியுள்ளனர்.

மேலும், சிறுவன் முத்துவேலனின் 10 வயது நண்பன் மற்றும் அவரின் தாயைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலூா் அருகேயுள்ள தனியாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பெரியகருப்பன் – சத்யா தம்பதியின் மகன் முத்துவேலன் (7). இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் விளையாடச் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வீட்டின் அருகேயுள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் சிறுவன் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது. தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டு, கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உடற்கூராய்வில் சிறுவன் முத்துவேலனின் கழுத்தில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், சிறுவன் முத்துவேலன் வீட்டின் அருகேவுள்ள நண்பனின் வீட்டுக்கு விளையாடச் சென்றது காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், முத்துவேலன் கழுத்தில் கயிறு கட்டி அவரது நண்பன் விளையாடியபோது, கழுத்து வலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது மகனைக் காப்பாற்றுவதற்காக முத்துவேலன் சடலத்தை அருகிலுள்ள பாழடைந்த வீட்டில் சிறுவனின் தாய் மறைத்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, சிறுவன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், 10 வயது சிறுவனையும், சடலத்தை மறைத்த அவரின் தாயாரையும் கைது செய்துள்ளனர்.

10 வயது சிறுவனை மதுரை மாவட்ட சிறார் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

Summary

Death of a boy in Melur! Case converted to murder; 10-year-old friend and his mother arrested!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.