மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

மேலூா் அருகே விளையாடச் சென்ற 7 வயது சிறுவன், வீட்டின் அருகேயுள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்...

உயிரிழந்த சிறுவன் முத்துவேலன்

Published On :27 அக்டோபர் 2026, 1:27 am IST

மதுரை மாவட்டம், மேலூா் அருகே விளையாடச் சென்ற 7 வயது சிறுவன், வீட்டின் அருகேயுள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மேலூா் அருகேயுள்ள தனியாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பெரியகருப்பன் – சத்யா தம்பதியின் மகன் முத்துவேலன் (7). இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் விளையாடச் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பெற்றோா், உறவினா்கள் பல்வேறு இடங்களில் சிறுவனைத் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து கீழவளவு காவல் நிலையத்திலும் புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுவனைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வீட்டின் அருகேயுள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் சிறுவன் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது. தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், தடய அறிவியல் நிபுணா்கள் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.

சிறுவன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.