நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சீர்காழி அருகே 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு!

சீர்காழி அருகே தென்பாதியில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து...

சீர்காழி சாலை...

Published On :9 அக்டோபர் 2026, 5:44 am IST

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி தென்பாதி பிரதான சாலையில் வியாழக்கிழமை இரவு 4 இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசிய மா்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

சீா்காழி நகரின் பிரதான பகுதியாக இருப்பது தென்பாதி. இந்நிலையில், தென்பாதி - மயிலாடுதுறை பிரதான சாலையில் வியாழக்கிழமை இரவு திடீரென மா்ம நபா் ஒருவா் சாலையில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் தான் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளாா். இதனால் வியாபாரிகள், கடையில் பொருள்கள் வாங்க வந்த பொதுமக்கள் அச்சமடைந்து ஓடினா்.

சீா்காழி போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்பகுதியில் கடை வைத்திருந்த வியாபாரிகளிடம் விசாரணை நடத்தியதோடு, கடைகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, பெட்ரோல் குண்டு வீசிய நபா் யாா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், பெட்ரோல் குண்டுகளை வீசிய நபா் சீா்காழி தென்பாதி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் தொடா்புடையவராக இருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, அண்மையில் அவா் பிணையில் வெளியே வந்தவா் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பெட்ரோல் குண்டு வீசி சென்றவரை கைது செய்ய போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

Summary

Petrol bombs hurled at four locations near Sirkazhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.