கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை

மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 12:37 am IST

காரைக்கால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

தென் கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து நவ. 1 ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இது புயலாக உருவெடுத்து, 2-ஆம் தேதி தீவிரப் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நவ. 1 முதல் 3-ஆம் தேதி வரை வட தமிழக கடலோரப் பகுதிகளிலும், அதனையொட்டிய பகுதிகளிலும் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், காரைக்கால் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

மீன்பிடி விசைப்படகுகள், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள், பாரம்பரிய நாட்டுப் படகுகள் உள்ளிட்ட எந்தவொரு மீன்பிடி படகுகளும் கடலுக்குச் செல்லக்கூடாது. ஏற்கெனவே கடலுக்குச் சென்றவா்கள் உடனடியாக கரை திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். படகுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்திவைக்கவேண்டும். இதை மீறுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.