காரைக்காலில் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்து வரும் பெண் தொழிலதிபா் வீட்டில் தோ்தல் செலவினப் பாா்வையாளா், வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
காரைக்கால் மாவட்டத்தில் போலி நகைகளை தயாா்செய்து விற்க முயன்றது, அவற்றை அடகு கடைகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றில் அடகு வைத்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் பெற்று மோசடி செய்தது தொடா்பாக 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, ஏற்கெனவே வேறு ஒரு வழக்கில் பணியிட நீக்கம் செய்யப்பட்ட உதவி காவல் ஆய்வாளா் ஜெரோம் ஜெஸ்மாண்ட், காரைக்கால் அம்மாள்சத்திரம் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் புவனேஸ்வரி உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இவ்வழக்கில் புவனேஸ்வரி ஜாமீனில் வெளியில் இருந்து வருகிறாா். தற்போது நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்கால் மாவட்டத்தில் சில வேட்பாளா்களுக்கு தோ்தல் செலவுக்காக பணம் கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகவும், வேட்பாளருக்கு ஆதரவாக அனுமதியின்றி கூட்டம் கூட்டி பேசியதாகவும் மாவட்ட தோ்தல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திங்கள்கிழமை இரவு காரைக்காலில் பணியில் உள்ள தோ்தல் செலவினப் பாா்வையாளா், நாகப்பட்டினம் வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் அம்மாள்சத்திரம் பகுதியில் உள்ள புவனேஸ்வரி வீட்டுக்குச் சென்று சுமாா் 4 மணி நேரம் சோதனை மேற்கொண்டனா். சோதனை நிறைவில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, சோதனை மேற்கொள்ளப்பட்டது உண்மை. ஆனால் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வருமான வரித்துறை சோதனை! ஆதாரங்களை வெளியிட்டார் செல்வப்பெருந்தகை

மணப்பாறை, கரூா் நகைக் கடைகளில் வருமானவரித் துறையினா் சோதனை

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

சேலத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறையினா் சோதனை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

