/

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை பற்றி...

News image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 12:40 pm IST

கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்கும் நோக்கில் வருமான வரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.

கரூரில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக வெளியான தகவலின் அடிப்படையில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக அறியப்படுபவரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் என்பவரின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கி எந்திய துணை ராணுவ வீரர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கரூர் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி, இந்த முறை கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Income Tax Department Raids Senthil Balaji's Friend's House!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.