கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி நேற்று சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டிக்கு வந்து தனது பெயர் இருக்கும் வாக்குச்சாவடியில் வாக்களிப்பார் என்று அவரது தொண்டர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தார்கள்.
கடந்த தேர்தலில் கரூரில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, என்ன காரணத்தினாலோ இந்த முறை கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் பிரசாரத்துக்காக அவ்வப்போது கோவை சென்று பிரசாரம் செய்து வந்தார்.
தேர்தல் பிரசாரங்கள் நிறைவு பெற்ற நிலையிலும், அவர் கரூர் திரும்பவில்லை. கோவையிலேயே நேற்று முழுக்க அவர் இருந்துள்ளார். கரூர் வந்து வாக்களிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் நினைத்திருந்த நிலையில், அவர் கோவையிலேயே இருந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
எம்எல்ஏ ஒருவர் தன்னுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் இருக்கலாமா என்று இது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், கரூரில் திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது, கோவை தெற்கு தொகுதியில் திமுகவின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்பதால்தான் செந்தில் பாலாஜி, வாக்குப்பதிவு முழுக்க வாக்குச்சாவடிக்குச் சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டு வந்தார். அதனால்தான் அவர் கரூர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
Summary
It is reported that Karur MLA Senthil Balaji did not go to his hometown and vote.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி

என் வாழ்க்கையை மாற்றியவர் சூர்யா! ஆர்.ஜே. பாலாஜி நெகிழ்ச்சி!

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி
மு.க. ஸ்டாலின்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்: செந்தில் பாலாஜி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


