காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடைபெற்றதாகவும், அவற்றை ஊடகங்களில் ஏன் அறிவிக்கவில்லை எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, புகைப்படம் மற்றும் விடியோ ஆதாரங்களை வெளியிட்ட செல்வப்பெருந்தகை, "இந்தப் புகைப்படங்களில் இருப்பவர்களெல்லாம் யார்? எந்த அதிகாரிகள்? இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

செல்வப்பெருந்தகை வெளியிட்ட விடியோ ஆதாரம்
அவர்கள் சோதனை செய்யவே இல்லை என உண்மையை மறைக்கிறார்களே. என் மீது புகாரும் கொடுக்கின்றனர்.
இப்போது இந்த புகைப்படங்களையும் வன்தட்டையும் (Hard Disk - ஹார்ட் டிஸ்க்) நான் ஒப்படைக்கிறேன்.
நீங்கள் சோதனை செய்வது தவறு கிடையாது. சோதனை மேற்கொண்டதை மக்களிடமோ பத்திரிகையாளர்களிடமோ தெரிவித்தீர்களா? ஏன் தெரிவிக்கவில்லை. இதில் என்ன ரகசியம் இருக்கிறது?
இந்த அதிகாரிகளெல்லாம் யார்? காவல்துறை ஏன் நிற்கின்றனர்?
அதிமுக, அமமுக, பாமகவினர் வீட்டிலெல்லாம் எவ்வளவு சோதனை செய்திருக்கிறீர்கள்? எவ்வளவு கைப்பற்றினீர்கள்? எத்தனை இடங்களில் சோதனை செய்தீர்கள் என வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
Summary
Congress Leader Selvaperunthagai released evidence indicating that an Income Tax Department raid had taken place
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
வருமான வரித் துறை சோதனை உண்மைதான்! இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!

பொய்த் தகவல் பரப்பிய செல்வப்பெருந்தகை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை: வருமான வரித்துறை புகாா்

வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

