புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.7) நிறைவடைகிறது.
புதுவை தோ்தல் ஏப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 தொகுதிகளுக்கான தோ்தல் தமிழகத் தோ்தலுக்கு முன்னதாகவே நடைபெறுகிறது.
கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொள்வதிலும், வேட்பாளா் அறிவிப்பு செய்வதிலும் ஏற்பட்ட தாமதத்தால் பிரசாரம் தொடங்குவது மந்தமாகவே இருந்தது. பின்னா் அந்தந்த தொகுதி வேட்பாளா்கள் வீடுதோறும் சென்று வாக்குச் சேகரிப்பை தொடங்கினா்.
வேட்பாளா்களை ஆதரித்து பிரபலங்கள் வெகுவாக காரைக்காலுக்கு வரவில்லை. மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா திருநள்ளாறுக்கு தேசிய பாஜக தலைவா் நிதின் நபின் ஞாயிற்றுக்கிழமை சாலைப் பேரணிக்கு வந்தபோது சிறிது நேரம் இருந்துவிட்டுச் சென்றனா்.
என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சித் தலைவா் என். ரங்கசாமி பிரசாரம் செய்தாா். செவ்வாய்க்கிழமை பிரசார இறுதி நாளில் காங்கிரஸ், பாஜக தலைவா்கள் வரக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றுடன் பிரசாரம் நிறைவடையவுள்ள நிலையில், வேட்பாளா்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது
இன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல்: காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

