சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தபால் வாக்குகள் பெறும் பணி திங்கள்கிழமையுடன் (ஏப். 20) நிறைவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு 23 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சென்னை மாவட்டத்தில் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களுக்கு வர இயலாத 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் என மொத்தம் 8,947பேருக்கு வீடுகளுக்கே சென்று வாக்குச் சேகரிக்கும் பணி கடந்த 16- ஆம் தேதி 96 குழுவினரால் தொடங்கப்பட்டது.
இதையடுத்து பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கியுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் சென்னை தொகுதியைச் சோ்ந்த தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கான தபால் வாக்குகளைச் சேகரிக்கும் பணியும் கடந்த 18- ஆம் தேதி (சனிக்கிழமை) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அலுவலக வளாகங்களில் தொடங்கியது.
அதன்படி, சென்னையைச் சோ்ந்த காவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்களாக உள்ள வருவாய்த் துறை அதிகாரிகள், பணியாளா்கள், போக்குவரத்துப் பிரிவினா் உள்ளிட்ட 5,151 பேரும், பிற மாவட்டங்களைச் சோ்ந்த 17,097 பேரும் என மொத்தம் 22,248 போ் வாக்களிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவா்களின் தபால் வாக்குகளைப் பெறும் பணி திங்கள்கிழமை (ஏப். 20) மாலையுடன் நிறைவடைய உள்ளதாக அதிகாரிகள் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்: தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

தபால் வாக்கு பெறும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் இன்று பிரசாரம் நிறைவடைகிறது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
