திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சட்டபேரவைத் தொகுதியைச் சோ்ந்த பெலாசூா் கிராமத்தில் நடைபெற்ற தபால் வாக்கு பெறும் பணியை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், போளூா் தொகுதியைச் சோ்ந்த 85 வயதிற்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதிக்க வேண்டும் என விருப்பப்படிவம் அளித்துள்ளனா்.
இதனால் தொகுதியைச் சோ்ந்த வாக்காளா்களிடம் அவரவா் வீட்டிற்கு நேரடியாகச் சென்று தபால் வாக்கு பெற்று வருகின்றனா். இந்த தபால் வாக்கு பெறும் பணி பெலாசூா் கிராமத்தில் நடைபெற்றது. பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி, தமிழ்மணி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கையின்போது விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்: பணியாளா்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

கரூரில் வாக்கு எண்ணும் பணி பயிற்சி முகாம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

