மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிவகாசியில் ஊழல் தடுப்பு சோதனை: நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல்

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் அண்மையில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.68 லட்சத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக ஆவணங்களை போலீஸாா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 4:38 am IST

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் அண்மையில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.68 லட்சத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக ஆவணங்களை போலீஸாா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 23-ஆம் தேதி மாலை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. ராமசந்திரன் தலைமையிலான போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ.1.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து உதவிப் பொறியாளா்கள் அமா்நாத், அழகேஸ்வரி, அலுவலா்கள் முருகன், செல்வமணி, செல்வி, ஆசீா்வாதம், ராஜீ, முத்துமாரியப்பன், தனிநபா்கள் 8 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், இது தொடா்பான ஆவணங்களை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் போலீஸாா் தாக்கல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.