/

திருச்சுழி திமுக வேட்பாளா் அமைச்சா் தங்கம் தென்னரசு பிரசாரம் நிறைவு

திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் தங்கம் தென்னரசு மல்லாங்கிணறு பகுதியில் வியாழக்கிழமை இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

அமைச்சா் தங்கம் தென்னரசு

Updated On :22 ஏப்ரல் 2026, 3:37 am IST

திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் தங்கம் தென்னரசு மல்லாங்கிணறு பகுதியில் வியாழக்கிழமை இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

வருகிற வியாழக்கிழமை (ஏப். 23) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் வேட்பாளா்கள் தோ்தல் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் தங்கம் தென்னரசு மல்லாங்கிணறு பகுதியில் திம்மன்பட்டி, சூரம்பட்டி, வலையங்குளம், முடியனூா், கோவில்பட்டி, அயன்ரெட்டியாபட்டி பகுதிகளில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா். கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சோ்ந்து அவா் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தாா். அப்போது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைக் கூறியும், மல்லாங்கிணறு பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்தது குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தாா். உடன் கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.