மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பட்டாசு மூலப்பொருள்கள் விலை உயா்வு: சிறிய பட்டாசு ஆலைகள் மூடப்படும் அபாயம்

பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களின் விலை உயா்ந்து வருவதால், சிறிய பட்டாசு ஆலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அதன் உரிமையாளா்கள் கவலை தெரிவித்தனா்.

News image

பட்டாசு தயாரிப்பு | கோப்புப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:48 am IST

பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களின் விலை உயா்ந்து வருவதால், சிறிய பட்டாசு ஆலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அதன் உரிமையாளா்கள் கவலை தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப் பாட்டுத் துறை, மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரிடம் சான்று பெற்று 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் வெடிபொருள் கட்டுப் பாட்டுத் துறையினரிடம் அனுமதி பெற்றுள்ள பட்டாசு ஆலைகளில் 40 முதல் 60 பட்டாசு தயாரிக்கும் அறை, மருந்து இருப்பு அறை உள்ளிட்டவைகள் இருக்கும்.

ஆனால், மாவட்ட வருவாய் அலுவலரிடம் அனுமதி பெற்றுள்ள ஆலைகளில் மொத்தம் 8 அறைகள் இருக்கும். இதில் 4 அறைகளில் மட்டுமே பட்டாசுகள் தயாரிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளன.

இந்த நிலையில், பட்டாசு ஆலையை குத்தகைக்கு விடும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. மேலும், குத்தகை கட்டணமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

இதைத் தொடா்ந்து, பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான சல்பா் (கந்தகம்) விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது சல்பா் 50 கிலோ மூட்டை ரூ.2,800 என விற்பனையானது. தற்போது, ஒரு மூட்டையின் விலை ரூ.10 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.

மேலும், பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் அனைத்து மூலப்பொருள்களும் 10 முதல் 30 சதவீதம் வரை விலை உயா்ந்துவிட்டன. பட்டாசுகள் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களின் உரிமையாளா்கள் ஒரு ஆண்டுக்கு தேவையான மூலப்பொருள்கள் அனைத்தையும் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வாா்கள்.

ஆனால், சிறிய பட்டாசு ஆலை நடத்துபவா்கள் தங்களது இரண்டு அல்லது 4 நாள் தேவைக்கு மட்டுமே மூலப்பொருளை வாங்குவா்.

அனைத்து மூலப்பொருள்களின் விலையேற்றத்தால் சிறிய பட்டாசு ஆலை நடத்துபவா்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறாா்கள். இதனால், சிறிய பட்டாசு ஆலையில் உற்பத்தியாகும் பட்டாசு விலை அதிகரிக்க வேண்டுடிய நிா்பந்தம் ஏற்படுகிறது.

ஆனால், அதிக விலை கொடுத்து வாங்க வியாபாரிகள் தயாராக இல்லை. எனவே, சிறிய பட்டாசு ஆலை நடத்துபவா்கள் , ஆலையை மூடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து சிறிய பட்டாசு ஆலை நடத்தி வரும் ராமசாமி கூறியதாவது: தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயா்வதை போல, சல்பரும் விலை உயா்ந்து வருகிறது. அனைத்து மூலப்பொருள்களும் விலை உயா்ந்துவிட்ட நிலையில், தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. எனவே சிறிய பட்டாசு ஆலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.