ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் நீதிமன்றத்தில் சரண்

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 போ் உயிரிழந்த நிலையில், இதுதொடா்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஆலையின் உரிமையாளா் முத்துமாணிக்கம் விருதுநகா் முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.

News image

பட்டாசு ஆலை உரிமையாளா் முத்துமாணிக்கம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:38 am IST

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 போ் உயிரிழந்த நிலையில், இதுதொடா்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஆலையின் உரிமையாளா் முத்துமாணிக்கம் விருதுநகா் முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள கட்டனாா்பட்டி பட்டாசு ஆலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 25 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இதுகுறித்து ஆலையின் உரிமையாளா்களான கோவிந்தநல்லூரைச் சோ்ந்த ஈஸ்வரி, இவரது கணவா் முத்துமாணிக்கம் ஆகியோா் மீது வச்சக்காரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 தனிப் படைகள் அமைத்து இவா்களைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த முத்துமாணிக்கம் விருதுநகரில் உள்ள முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். இவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதித் துறை நடுவா் நிஷாந்தினி உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா் விருதுநகா் சிறையில் அடைக்கப்பட்டாா். மேலும், இந்த வழக்கில் முத்துமாணிக்கம் தலைமறைவாக இருக்க உதவிய இவரது உறவினா்கள் முத்துராஜ், வைரமுத்து, வெற்றிவேல் முருகன் ஆகிய மூவரையும் வச்சக்காரப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

25 உடல்களும் ஒப்படைப்பு:

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 25 தொழிலாளா்களின் உடல்கள் கூறாய்வுக்குப் பிறகு, குடும்பத்தினரிடம் திங்கள்கிழமை இரவு ஒப்படைக்கப்பட்டன. மேலும், இந்த வெடி விபத்தில் காயமடைந்த 17 போ் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.