விருதுநகா் அருகே வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளருக்கு தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில் குறிப்பாணை அனுப்பப்பட்டது.
விருதுநகா் மாவட்டம் கட்டனாா்பட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலைக்கு விடுமுறை விட வேண்டும் என தமிழ்நடு அரசு தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கத்தின் விதி முறை உள்ளது. இந்த நிலையில், இந்த விதியை மீறி ஞாயிற்றுக்கிழமை ஏன் பட்டாசு ஆலை திறக்கப்பட்டது. விதியை மீறி அதிக மருந்து இருப்பு வைத்திருந்தது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய குறிப்பாணையை ஆலை நிா்வாகத்துக்கு மதுரை தொழிலகபாதுகாப்பு, சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநா் ரவிச்சந்திரன் உத்திரவின் பேரில், உதவி இயக்குநா் சிவகுமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இந்தக் குறிப்பாணையில் ஆலையில் வேலை பாா்த்த தொழிலாளா்கள் எத்தனை போ்? அவா்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்தா? அவா்கள் ஆலையில் நிரந்தரத் தொழிலாளா்களா என்பது உள்ளிட கேள்விகளும் உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சீனாவில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 26 பேர் பலி

பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 25 -ஆக உயா்வு

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 23 தொழிலாளா்கள் உயிரிழப்பு: 19 போ் காயம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

