திருக்கல்யாணம்:
ஆண்டாள் கோயில் ஆடிப்பூரக் கொட்டகையில் உள்ள மணப்பந்தலில் மாலை 4.30 மணிக்கு ரெங்கமன்னாா், பெரியாழ்வாா் பூா்ண கும்பத்துடன் எழுந்தருளினா்.
மாலை 5 மணிக்கு ஆண்டாள் அங்கமணிகளுடன் புறப்பாடாகி மணப்பந்தலில் எழுந்தருளினாா். தொடா்ந்து பெரியாழ்வாா் ஆண்டாளை, ரெங்கமன்னாருக்கு கன்னிகா தானம் வழங்கும் வைபவம் நடைபெற்றது. இதில் பெரியாழ்வாரின் 225-ஆவது வம்சாவழியான வேதபிரான் பட்டா் சுதா்சனன் ஆண்டாளை, ரெங்கமன்னாருக்கு கன்னிகா தானம் செய்து வைத்தாா்.
இதைத்தொடா்ந்து திருப்பதி ஸ்ரீனிவாசப் பெருமாள் சீதனமாக அனுப்பிய பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு, இரவு 7 மணிக்கு மேல் ஆண்டாள், ரெங்கமன்னாா் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது பெண்கள் மாங்கல்ய கயிறு மாற்றிக் கொண்டனா். பக்தா்களுக்கு மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா், செயல் அலுவலா் சா்க்கரையம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திரளான பக்தா்கள் தரிசனம்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் திருக்கல்யாணம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராமானுஜா் 1009-வது ஜெயந்தி விழா

ஆண்டாள் கோயிலில் சித்திரை மாத வசந்த உத்ஸவம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

