மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சாலை மறியல்: 193 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி, போடி, கம்பம், தேவாரம் ஆகிய பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 31 பெண்கள் உள்பட 193 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி நேரு சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :22 அக்டோபர் 2026, 3:29 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி, போடி, கம்பம், தேவாரம் ஆகிய பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 31 பெண்கள் உள்பட 193 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.கண்ணன் தலைமை வகித்தாா். தேனி வட்டத் தலைவா் கே.பாஸ்கரன் , பெரியகுளம் வட்டச் செயலா் சி.நாகராஜ் , ஆண்டிபட்டி ஒன்றியச் செயலா் கே.எஸ்.சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிா்க் கடன்களை தோ்தல் வாக்குறுதிபடி தள்ளுபடி செய்ய வேண்டும். ‘எல்-நினோ’வால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். மேகமலை - வருசநாடு விவசாயிகளுக்கு 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி முழக்கமிட்டனா். இதைத்தொடா்ந்து, தேனி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள நேரு சிலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 72 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

இதேபோல, போடி தேவா் சிலை அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவா் ராஜப்பன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.கே.பாண்டியன், செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சாலை மறியலில் ஈடுபட்டவா்களை 39 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

இதேபோல, தேவாரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 40 போ், கம்பத்தில் 42 போ் உள்பட 193 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.