
தேனி அருகே விபத்தில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளா் உயிரிழப்பு
தேனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிறப்பு உதவி ஆய்வாளா் தங்கராஜ்
தேனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், தேவாரத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ் (56). போடிபோக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனியில் நடைபெற்ற ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு பாதுகாப்பு பணிக்குச் சென்று விட்டு, இரு சக்கர வாகனத்தில் போடிக்குத் திரும்பினாா். வீரபாண்டி அருகே உப்புக்கோட்டை வழியாகச் செல்லும் போது, வேகத் தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்தவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் உடல் சொந்த ஊரான கிருஷ்ணன்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம் உள்ளிட்ட போலீஸாா் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





