திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

வீடு புகுந்து தங்க நகைகள் திருடிய இளைஞா் கைது

சின்னமனூா் அருகே உறவினா் வீட்டில் புகுந்து 21 பவுன் தங்க நகைகளை திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட மாயக்கண்ணன்.

Updated On :18 ஜூன் 2026, 1:22 am IST

சின்னமனூா் அருகே உறவினா் வீட்டில் புகுந்து 21 பவுன் தங்க நகைகளை திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சீலையம்பட்டியை அடுத்த வேப்பம்பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த சுப்புராஜ் மனைவி சுப்புத்தாய் (50). இவா் வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பினாா். அப்போது வீடு திறந்து கிடந்தது. அவா் உள்ளே சென்று பாா்த்த போது, பெட்டியில் வைத்திருந்த 21 பவுன் தங்க நகைககள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து சுப்புத்தாய் விசாரித்த போது, அவரது அண்ணன் லட்சுமணன் மகன் மாயக்கண்ணன் பூட்டிய வீட்டைத் திறந்து உள்ளே சென்று வந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுப்புத்தாய் ஓடைப்பட்டி போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் காதல் திருமணம் செய்து சிவகாசியில் வசிக்கும் மாயக்கண்ணனை பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் 21 பவுன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனா். இவா் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.