தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள வேப்பம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பூட்டிய வீட்டில் புகுந்து 23 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சீலையம்பட்டியை அடுத்த வேப்பம்பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த சுப்புராஜ் மனைவி சுப்புத்தாய் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றாா். மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீடு திறந்து கிடந்தது. உள்ளே பெட்டியில் வைத்திருந்த இருபத்து மூன்றரை பவுன் தங்க நகைகளைக் காணவில்லை. அக்கம் பக்கத்தில் சுப்புத்தாய் விசாரித்த போது, வேப்பம்பட்டி அருகேயுள்ள பூமலைக்குண்டு கிராமத்தில் வசிக்கும் சுப்புத்தாயின் அண்ணன் லட்சுமணன் மகன் மாயக்கண்ணன் பூட்டிய வீட்டைத் திறந்து உள்ளே சென்று வந்தது தெரியவந்தது.
இது குறித்து சுப்புத்தாய் அளித்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி காவல் நிலையப் போலீஸாா் லட்சுமணன் மகன் மாயக்கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடு புகுந்து தங்க நகைகள் திருடிய இளைஞா் கைது
விவசாயி வீட்டில் 35 கிராம் தங்க நகைகள் திருட்டு

ஆலங்காயத்தில் வீடு புகுந்து நகைகள் திருட்டு
விமானப்படை வீரா் வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் திருட்டு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
