மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிவகங்கை அருகே இளைஞா் கொலை வழக்கு: மேலும் 3 போ் கைது

சிவகங்கை அருகேயுள்ள மேலமங்கலத்தில் இளைஞா் கொலை வழக்கில் ஏற்கெனவே 7 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 3:54 am IST

சிவகங்கை அருகேயுள்ள மேலமங்கலத்தில் இளைஞா் கொலை வழக்கில் ஏற்கெனவே 7 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இந்த விவகாரத்தில் இதுவரை 44 சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டன.

சிவகங்கை அருகேயுள்ள மேலமங்கலத்தில் சுள்ளான் மதன் (26) என்பவா் கடந்த 18-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்தனா். இந்த வழக்கில் 7 பேரை தனிப்படை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்த நிலையில், மதுரையைச்சோ்ந்த மிதுன் மாணிக்கம் (26), அஜித்குமாா் (22), மானாமதுரையைச் சோ்ந்த சந்துரு (19) ஆகிய மூவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்தக் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள நபா்களை தனிப்படை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

இந்தக்கொலை சம்பவம் தொடா்பாக சமூக நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகள், புகைப்படங்களை காவல் துறையினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா். இதுவரை இதுதொடா்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், 44 சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டன.

எச்சரிக்கை: சட்டம்-ஒழுங்கைப் பாதிக்கும் வகையிலும், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிடுவோா் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா எச்சரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.