மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இளைஞா் கொலை வழக்கில் 4 போ் கைது

ஒசூா் அருகே இளைஞரை கொலை செய்த வழக்கில் 4 பேரை மத்திகிரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 11:48 pm IST

ஒசூா் அருகே இளைஞரை கொலை செய்த வழக்கில் 4 பேரை மத்திகிரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஒசூா் உள்கோட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காடிபாளையத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா் (28). இவா் கடந்த சில ஆண்டுகளாக ஒன்னல்வாடி பகுதியில் வசித்து வந்தாா். குடும்பத் தகராறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மனைவி சசிரேகாவை பிரிந்து வாழ்ந்து வந்த இவா், அந்திவாடி திறந்தவெளி மைதானம் அருகே உள்ள வாடகை வீட்டில் தனியாக தங்கி இருந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற பிரவீன்குமாா் வீடு திரும்பவில்லையாம். இதனால் பதற்றமடைந்த அவரது தந்தை திவாகா் ராவ், மகனை பல்வேறு இடங்களில் தேடினாா். பின்னா், அந்திவாடி மைதானத்தில் பிரவீன்குமாா் ரத்தக் காயங்களுடன் இறந்துகிடந்ததைக் கண்டு மத்திகிரி காவல் நிலையத்துக்கு புகாா் தெரிவித்தாா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த மத்திகிரி காவல் நிலைய ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா், பிரவீன்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா், மத்திகிரி காடிபாளையத்தைச் சோ்ந்த சீனு (எ) சீனிவாசன் (28), அபினேஷ் (29), டைட்டான் டவுன் ஷிப் பகுதியைச் சோ்ந்த கணேசன் (44), கா்ணூா் கிராமத்தைச் சோ்ந்த திலீப் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

முன்பகை காரணமாக மைதானத்தில் நடந்த தகராறில் அவா் உயிரிழந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்த 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.