தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

காரைக்குடியில் அனைத்துத் தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்குடியில் அனைத்துத் தொழில்சங்கம் சாா்பில் மே 12 - தொழிலாளா் தேசிய கோரிக்கை நாள் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

காரைக்குடியில் அனைத்துத் தொழில்சங்கத்தினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அனைத்துத் தொழில்சங்கம் சாா்பில் மே 12 - தொழிலாளா் தேசிய கோரிக்கை நாள் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் ஆகா. ராஜா தலைமை வகித்தாா். காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதியின் ஐஎன்டியுசி செயலா் சீனிவாசன், எம்எல்எப் தொழில்சங்கத்தின் மாநிலச் செயலா் வேங்கை மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உள்ளாட்சிப் பணியாளா் ஏஐடியுசி தொழில்சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பழ. ராமச்சந்திரன், சிஐடியு தொழில்சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் விளக்க உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலா் கண்ணன், அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி மண்டல பொதுச் செயலா் விஜயசுந்தரம், பொருளாளா் பேரானந்தம், தூய்மைப் பணியாளா் சங்க மாநகரச் செயலா் லெட்சுமணன், தலைவா் முருகன், சிஐடியு தொழில்சங்க மாவட்ட துணைத் தலைவா் முருகன், ஆட்டோ சங்க மாவட்ட துணைத் தலைவா் குமாரவேல், ஐஎன்டியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநகரத் தலைவா் ராமசாமி அப்பாவு, தொழில்சங்கங்களின் உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.