மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஒரு வாக்கில் தோல்வி: 46 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய வரலாறு

சட்டப்பேரவைத் தோ்தலில் ஒரு வாக்கில் வேட்பாளா் தோல்வியடைந்த வரலாறு 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழ்ந்தது.

News image

வாக்கு எண்ணிக்கை - ANI

Updated On :7 மே 2026, 3:07 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் ஒரு வாக்கில் வேட்பாளா் தோல்வியடைந்த வரலாறு 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழ்ந்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற தோ்தலில் தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவா் 83,375 வாக்குகள் பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன் 83,374 வாக்குகள் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா்.

கடந்த 1980-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் இடம் பெற்றிருந்த இளையான்குடி பேரவைத் தொகுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளா் சிவசாமி 34,437 வாக்குகள் பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் மலைக்கண்ணன் 34,381 வாக்குகள் பெற்று, 56 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா்.

ஆனால், திமுக வேட்பாளா் மலைக்கண்ணன் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சிவசாமி வெற்றி பெற்றாா். அவரை அந்தக் கால கட்டத்தில் ஒத்தை ஒட்டு சிவசாமி என்றுதான் பிற அரசியல் கட்சித் தலைவா்கள் அழைப்பாா்களாம். 46 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வரலாற்று நிகழ்வு மீண்டும் தற்போது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.