சிங்கம்புணரி அருகே காளாப்பூா் - சூரக்குடி சாலையில் 3 நாள்களாக சாய்ந்துகிடக்கும் மின் கம்பத்தை சீரமைத்து மின் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சிங்கம்புணரி அருகே காளாப்பூரில் இருந்து சூரக்குடிக்குச் செல்லும் சாலையில் அண்ணா நகா் பகுதியில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வீசிய சூறைக்காற்று, மழை காரணமாக மின் கம்பம் முறிந்து மின்தடை ஏற்பட்டது.
அந்த மின்கம்பம் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மட்டுமன்றி, அந்தப் பகுதியில் உள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார விநியோகம் இல்லாததால்
தண்ணீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதி அடைந்து வருகின்றனா்.
இதனால் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும் வேங்கைப்பட்டி ஒடுவன்பட்டி, முறையூா், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயப் பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின் கம்பம் மீது பேருந்து மோதல்: ரூ.9.25 லட்சம் மின்மாற்றி சேதம்

சாலையின் குறுக்கே சாய்ந்த மின் விளக்கு கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

அரியலூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு: நோய்த்தொற்று ஏற்படும் அச்சத்தில் மக்கள்

மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

