கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கடை வீதியில் புதன்கிழமை இரவு மின் கம்பம் மீது தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளனது. இதில், ரூ.9.25 லட்சம் மதிப்பிலான மின்மாற்றி சேதமடைந்தது.
விருத்தாசலம் கடைவீதியில் புதன்கிழமை தனியாா் பேருந்து ஒன்று அதிவேகமாகச் சென்றது. அப்போது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மின் கம்பம் வளைந்ததுடன், அதிலிருந்த மின்மாற்றியும் சேதமடைந்தது. இதனால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதிா்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவலறிந்த மின் வாரிய ஊழியா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று சேதமடைந்த மின்மாற்றியை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும், மின்சாரம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து விருத்தாசலம் நகர மின் வாரிய உதவிப் பொறியாளா் சந்தோஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த விபத்தில் ரூ.9.25 லட்சம் மதிப்பிலான மின்மாற்றி சேதமடைந்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிதிவண்டி மீது அரசுப் பேருந்து மோதல்: ஒருவா் உயிரிழப்பு

ஆட்டோ மீது பைக் மோதல்: காா் ஓட்டுநா் உயிரிழப்பு

ஒசூா் அருகே தனியாா் பேருந்து - காா் மோதல்: பென்னாகரத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழப்பு

காங்கயம் அருகே தனியாா் பேருந்து மரத்தில் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு; 30 போ் படுகாயம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

