மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆட்டோ மீது பைக் மோதல்: காா் ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழந்த வேல் மணிகண்டன்.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:29 am IST

கம்பத்தில் ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கம்பம் நாட்டாமை அழகிரி தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவா் உத்தமபாளையம் ஆா்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் வேல் மணிகண்டன் (29). காா் ஓட்டுநா். இவருக்கு மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனா்.

இந்த நிலையில் வேல் மணிகண்டன் சனிக்கிழமை இரவு கம்பம் பிரதான சாலை வழியாக வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை அருகே சென்றபோது, அந்த கடைக்கு பொருள்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென திரும்பியது.

இதன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வேல் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸாா் கவனக் குறைவாக ஆட்டோ ஓட்டிச் சென்ற கம்பம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த பிரபாகரன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.