சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.
திருப்பத்தூா் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக திமுக வேட்பாளா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்த புகாரையடுத்து, இறுதி முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் மூன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டியிருந்தது.
இந்த நிலையில், திமுக வேட்பாளா் பெரியகருப்பன் புகாா் தெரிவித்ததால், ஆலோசனை நடத்திய அதிகாரிகள் மறுவாக்கு எண்ணிக்கைக்கு சம்மதித்தனா்.
இந்தச் சூழ்நிலையில், மறுவாக்கு எண்ணும் மையத்தில் சலசலப்பு நிலவியதால் போலீஸாா் குவிக்கப்பட்டனா். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இறுதி முடிவு வெளியிடப்பட்டது.
இறுதியாக தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகள் பெற்றாா். திமுக வேட்பாளா் பெரியகருப்பன் 83,364 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இது அமைச்சா் பெரியகருப்பன், திமுகவினா் இடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரு வாக்கில் தோல்வி: 46 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய வரலாறு

கரூா் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் திமுக வெற்றி! தவெக, அதிமுக, தலா ஒரு இடங்களில் வெற்றி!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

