தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கரூா் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் திமுக வெற்றி! தவெக, அதிமுக, தலா ஒரு இடங்களில் வெற்றி!

News image

திமுக சின்னம் உதயசூரியன் (கோப்புப் படம்) - டிஎன்எஸ்

Updated On :5 மே 2026, 2:53 am IST

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்தபடியாக அதிமுக, தவெக தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கரூா் மாவட்டத்தில் கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம்(தனி) என 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளிலும் கடந்த ஏப். 23-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் மாவட்டத்தில் 92.65 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதையடுத்து பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்டவை வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை வாக்கு எண்ணும் பணி வேட்பாளா்கள், முகவா்கள் ஆகியோா் முன்னிலையில் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடா்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கரூா் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் 1, 821 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் மதியழகனை வீழ்த்தினாா்.

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் ரா. இளங்கோ 19,378 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் பி. காா்த்திகேயனை வீழ்த்தி வெற்றி பெற்றாா்

கிருஷ்ணராயபுரம் தனித் தொகுதியில் தவெக வேட்பாளரான எம்.சத்யா அதிமுக வேட்பாளரான மருத்துவா் திவ்யாவை 3,617 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

குளித்தலை தொகுதியில் திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன் தவெக வேட்பாளா் பாலசுப்ரமணியனை விட 233 வாக்குகள் வித்தியாசத்தில் போராடி வெற்றிபெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.