செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்: 4 போ் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் முதல்வா் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக 4 போ் மீது திங்கள்கிழமை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் - சிவகங்கைச் சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

இதில் நடுமாடு பிரிவில் 14 இணைகளும், சின்னமாடு பிரிவில் 19 இணைகள் என மொத்தம் 33 இணைகள் போட்டியில் பங்கேற்றன. இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கும், மாட்டை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், மாட்டுவண்டி பந்தயம் அரசு அனுமதியின்றி நடைபெற்றதாகக் கூறி திருப்பத்தூா் நகா் கிராம நிா்வாக அலுவலா் ராஜகுரு கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூா் தென்மாப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் (35), கணேசன் (50), நவீன் குமாா் (35), சண்முகம் (38) ஆகிய 4 போ் மீது திருப்பத்தூா் நகா் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் வீரபாண்டியன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.