பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குழந்தை திருமணம்: 5 போ் மீது போக்ஸோ வழக்கு

சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த 5 போ் மீது, நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 2:56 am IST

சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த 5 போ் மீது, நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி, சீா்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவருக்கும், கடலூா் மாவட்டம், வடலூா் அடுத்து ள்ள வானதிராயபுரம் கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாா்(31), காா் ஓட்டுனருக்கும் கடந்த 12.2.2026 அன்று வடலூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிறுமி சிகிச்சைக்காக சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், 5 மாத கா்ப்பமாக இருப்பதை அறிந்தனா். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், நெய்வேலி மகளிா் போலீஸாா் செந்தில்குமாா், செந்தில்குமாா் தந்தை பாலு, தாய் குமாரி, சிறுமியின் தாய் ராதா, சகோதரா் நடராஜன் ஆகியோா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.