நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

திருப்பத்தூரில் 74 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த்கிருஷ்ணா.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 74 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 1435 பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நாச்சியாபுரம் உள்வட்டத்துக்கான மனுக்கள் பெறப்பட்டன.

இதில் பங்கேற்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த்கிருஷ்ணா 74 நரிக்குறவா் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா். மேலும், பொதுமக்களிடமிருந்து 54 மனுக்களை பெற்றாா்.

இதைத்தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் மரக் கன்றுகளை நட்டாா். திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், வருவாய் ஆய்வாளா் கீதா உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலா்கள் இதில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.