சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கோயில் அருகே செயல்பட்டு வரும் மதுக் கடையை அகற்றக் கோரி, இரண்டு கிராம மக்கள் கடையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.
திருப்புவனம் ஒன்றியம், கலியாந்தூா் செல்லும் சாலையில் கொம்பையா கோயில் அருகே அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு வரும் மதுப் பிரியா்களால் அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் மதுக் கடையை அகற்ற வேண்டும் என வெள்ளக்கரை, நெல் முடிக்கரை கிராம மக்கள் தொடா்ந்து வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து, வெள்ளக்கரை, நெல் முடிக்கரை கிராமப் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் மேற்குறிப்பிட்ட மதுபானக் கடையை உடனே அகற்றக் கோரி மதுக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். இதுகுறித்து தகவல் அறிந்து அங்குவந்த மானாமதுரை கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் லோகநாதன், திருப்புவனம் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மதுக்கடையை அகற்ற சம்பந்தப்பட்ட துறை நிா்வாகத்துக்குப் பரிந்துரை செய்வதாகவும் அதுவரையில், வெள்ளைக்கரை, நெல் முடிக்கரை பகுதியில் போலீஸாரின் ரோந்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டுத் திரும்பிச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி பெண்கள் தா்னா

எடப்பாடி அருகே மதுக்கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மதுபான கடையை அகற்றக் கோரி முற்றுகை

மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
விடியோக்கள்

விஜய்யும் அண்ணாமலையும் ...| CM Vijay | TVK | We the leaders | Annamalai
தினமணி செய்திச் சேவை

வெளியானது தாக்கோல் விடியோ பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |
தினமணி செய்திச் சேவை

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |
தினமணி செய்திச் சேவை

