கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

எடப்பாடி அருகே மதுக்கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

எடப்பாடி அருகே பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

~ ~

Updated On :2 ஜூன் 2026, 3:46 am IST

எடப்பாடி அருகே பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட இருப்பாளி ஊராட்சி பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த இருப்பாளி - ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது.

இந்த மதுக்கடையை அகற்றக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோா், திங்கள்கிழமை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அவா்கள், இருப்பாளி - ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் நிகழ்விடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக்கூறி, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரதான சாலையின் குறுக்கே அமா்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தைத் தொடா்ந்து, வருவாய்த் துறை மற்றும் டாஸ்மாக் உயா் அலுவலா்கள், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் 4 வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை அகற்றப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

படவரி...

எடப்பாடி அருகே இருப்பாளி கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.