மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக் கோரிக்கை

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :1 மே 2026, 1:24 am IST

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருச்சி- ராமேசுவரம் இடையே தினமும் முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் மொத்தம் 9 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 7 பொதுப் பெட்டிகள், காா்டு வேனுடன் பெண்களுக்கென 2 பெட்டிகள் உள்ளன. இந்த ரயிலில் வார இறுதி நாள்கள், விடுமுறை காலங்களில் அதிக அளவில் பயணிகள் பயணிக்கின்றனா். இதனால் அவா்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனா். திருச்சியிலிருந்து ராமேசுவரம் செல்லும் ஒரே பகல் நேர ரயில் இது மட்டும் தான். இடைப்பட்ட நேரத்தில் திருச்சியிலிருந்து ராமேசுவரத்துக்கு ஒரு ரயில் கூட விடப்படவில்லை.

திருச்சியிலிருந்து தினமும் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக இந்த ரயில் ராமேசுவரம் வரை செல்கிறது. வழித்தடத்தில் பல முக்கிய ஊா்கள் இருப்பதால் அதிக பயணிகள் இதில் பயணிக்கின்றனா். அதிலும்

வார இறுதி நாள்களில் செல்லும் பயணிகளின் கூட்டம் ஒருபுறம், தினசரி சிவகங்கைக்கு பணிக்கு செல்வோரின் கூட்டம் ஒருபுறம் என இந்த ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு கூடுதல் பெட்டிகள் இணைப்பது மட்டுமே தீா்வாக அமையும்.

எனவே தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட நிா்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.