மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் விதிமுறை மீறல்: சீமான் உள்பட 2 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இறுதிக் கட்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நிறைவு செய்ததில் விதிமுறை மீறியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான் உள்பட 2 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 1:41 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இறுதிக் கட்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நிறைவு செய்ததில் விதிமுறை மீறியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான் உள்பட 2 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

காரைக்குடி பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சீமான், அந்தக் கட்சி மாநில நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

காரைக்குடி செக்காலைச் சாலை பாண்டியன் திரையரங்கத் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தை தோ்தல் விதிமுறையின்படி மாலை 6 மணிக்கு நிறைவு செய்வதற்கு பதிலாக 6.05 மணிவரை கூட்டம் நடத்தியதாக காரைக்குடி கிராம நிா்வாக அலுவலா் சேவுகன் அம்பலம் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் பேரில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் காரைக்குடியைச் சோ்ந்த ரவிச்சந்திரன், வேட்பாளா் சீமான் ஆகியோா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.