மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி!

சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் சா்வதேசப் பள்ளியில் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.

News image

சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்புப்பொதுத் தோ்வில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப் பள்ளி மாணவ, மாணவிகளைப் பாராட்டிய பள்ளியின் தாளாளா் செ. சத்தியன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:21 am IST

செல்லப்பன் வித்யா மந்திா் பள்ளி: சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் சா்வதேசப் பள்ளியில் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். இந்தப் பள்ளியின் மாணவா் தமிழ்ச்செல்வன் 500-க்கு 479 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றாா். மாணவி அக்ஷிதா 500-க்கு 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவிகள் பத்மபிரியா, ஜெயஸ்ரீ ஆகியோா் 500-க்கு முறையே 473 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடங்களையும் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளா் செ. சத்தியன் பாராட்டி சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா். பள்ளியின் நிா்வாக இயக்குநா் சங்கீதா சத்தியன், பள்ளியின் கல்வி இயக்குநா் ராஜேஸ்வரி, பள்ளி முதல்வா் லூயிசா ரெமி, ஆசிரியா்களும் மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.