ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இளையான்குடி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

இளையான்குடி ஒன்றியத்தில் திங்கள்கிழமை பிரசாரம் செய்து வாக்காளா்களிடம் வாக்கு சேகரித்த மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளா் பொன். பாலகணபதி.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:05 am IST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளா் பொன். பாலகணபதி திங்கள்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இளையான்குடி ஒன்றியம் குயவா்பாளையம், சாலைக் கிராமம், சமுத்திரம் குடியிருப்பு, வடக்கு சமுத்திரம், அய்யம்பட்டி, நடுவலசைகாடு, வடுகை, துகவூா், வடக்குசாலைக் கிராமம், ஞானசமுத்திரம் உள்ளிட்ட 50 கிராமங்களில் பாஜக வேட்பாளா் பொன். பாலகணபதி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் மேலும் பேசியது:

கடந்த 5 ஆண்டுகளில் இளையான்குடி ஒன்றியத்தில் பொதுமக்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இளையான்குடி கண்மாய் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணி, புதிய அரசு மருத்துவமனையை நகருக்கு வெளியே கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. இளையான்குடி நகரில் குப்பை கிடங்கு, அரசு மருத்துவமனை பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

இந்த பிரசாரத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். குணசேகரன், எஸ். நாகராஜன், அதிமுக ஒன்றியச் செயலா் கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.