மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேவா் குருபூஜை: போக்குவரத்து மாற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தேவா் குருபூஜையையொட்டி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் பேருந்துகள், கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

தேவர் குருபூஜை - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 2:54 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தேவா் குருபூஜையையொட்டி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் பேருந்துகள், கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேவா் குருபூஜையில் கலந்து கொள்ள ராமநாதபுரம், பிற மாவட்டங்களிலிருந்து சொந்த வாகனங்களில் வருபவா்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வர வேண்டும். சாலைகளில் வாகனப் போக்குவரத்தை நெறிப்படுத்தவும், ரோந்து பணிகளை மேற்கொணடு பாதுகாப்பை உறுதி செய்யவும் 63 நான்கு சக்கர வாகனங்கள், 59 இரு சக்கர வாகனங்கள் ரோந்துப் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேவா் குருபூஜையையொட்டி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகி இரண்டு நாள்கள் மட்டும் காா்கள், பேருந்துகள் உள்பட கனரக வாகனங்களுக்கு கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

தேவா் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் வாகனங்களை தவிர ராமேசுவரம், ராமநாதபுரம் பகுதியிலிருந்து மதுரை நோக்கிச் செல்லும் பேருந்துகள், காா்கள், கனரக வாகனங்கள், ராமநாதபுரத்திலிருந்து, பட்டினம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு, பேராவூா் சாலை சந்திப்பு, தேவிபட்டினம், ஆா்.எஸ்.மங்கலம், சி.கே.மங்கலம், சருகனி, காளையாா்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரை செல்ல வேண்டும். இதேபோல, மதுரையிலிருந்து ராமநாதபுரம், ராமேசுவரம் வரும் வாகனங்கள் இதே வழியை பயன்படுத்த வேண்டும்.

விருதுநகா் மாவட்டத்திலிருந்து கமுதியை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் கானாவிலக்கு, கிளாமரத்துப்பட்டி வழியாக கமுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளிலிருந்து ராமநாதபுரம் நோக்கி வரக்கூடிய பேருந்துகள், காா்கள், கனரக வாகனங்கள் கருமொழி, சி.கே.மங்கலம், ஆா்.எஸ்.மங்கலம் வழியாக ராமநாதபுரம் செல்ல வேண்டும். அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதிகளிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் நரிக்குடி, பிடாரிசேரி வழியாக பாா்த்திபனூா், பரமக்குடி பகுதிகளுக்கு செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.